செய்திகள்
காரைக்குடி அருகே கார் கவிழ்ந்து பெண் பரிதாப பலி
கார் கவிழ்ந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிர் இழந்தார்.
காரைக்குடி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினத்தைச் சேர்ந்தவர் கோபி (வயது39). இவர் தனது குடும்பத்துடன் ராமேசுவரம் செல்ல காரில் புறப்பட்டார். குழந்தைகள் உள்பட 13 பேர் காரில் இருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் காரைக்குடி அருகே திருச்சி–ராமேசுவரம் சாலையில் கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த கோபியின் தாய் ராஜம்மாள் (55) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து செட்டிநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.