தாளவாடி ஆசனூரில் திடீர் சாரல் மழை
சக்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் வருத்தெடுக்கிறது. அனல் காற்றும் வீசி மக்களை பாடப்படுத்துகிறது.
கோடை மழை பெய்து உள்ளத்தை குளிர வைக்காதா? என ஈரோடு மாவட்ட மக்கள் வருணபகவானை வேண்டியபடி உள்ளனர்.
மாவட்டத்தில் வனப் பகுதிகளான திம்பம், ஆசனூர், தாளவாடி மற்றும் அந்தியூர், பர்கூர், கடம்பூர் வனப்பகுதியும் வெயின் கோர பிடியிலிருந்து தப்பவில்லை. மரங்கள் செடி–கொடிகள் எல்லாம் பசுமை இழந்து காய்ந்து போய் கிடக்கிறது.
இந்த நிலையில் சக்தியமங்கலம் வனப்பகுதிகளை திம்பம், ஆசனூர் மற்றும் தாளவாடி பகுதியில் நேற்று முன்தினம் திடீரென சாரல் மழை பெய்தது. 5 நிமிடம் வரை பெய்த இந்த மழை பிறகு நின்று விட்டது. இந்த மழை கொஞ்சம் ஓங்கி பெய்திருந்தால் வனப் பகுதி புத்துயிர் பெற்றிருக்கும் மழை பெய்யும் என மலைப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
சக்தியமங்கலத்தில் நேற்று 3 நிமிடம் சாரல் மழை பெய்து மக்களை ஏமாற்றி விட்டு சென்று விட்டது.