துடியலூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை
கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் அருகே உள்ள கணுவாய் இந்திரா காலனியை சேர்ந்தவர் ஜெயபாலன். கூலித்தொழிலாளி. இவரது மகள் சந்திரிக்கா (வயது 19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று ஜெயபாலன் மற்றும் அவரது மனைவி அம்சவேணி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். சந்திரிக்கா வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்ததும் சந்திரிக்காவின் தாய் அம்சவேணி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது சந்திரிக்கா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்து.
இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சந்திரிக்காவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சந்திரிக்கா காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.