செய்திகள்

சூலூரில் விமான படை பாதுகாப்பு வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published On 2016-04-25 11:58 IST   |   Update On 2016-04-25 11:57:00 IST
கோவை மாவட்டம் சூலூரில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வாலிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்

சூலூர் :

கோவை மாவட்டம் சூலூரில் விமான படை தளம் உள்ளது. இங்கு பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருபவர் பிரவீன். இவர் கேரளாவை சேர்ந்தவர். இந்த நிலையில் இன்று காலை பிரவீன் பணியில் இருந்தார்.

அப்போது திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு பிரவீன் தற்கொலை செய்து கொண்டார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் பிரவீன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சூலூர் போலீசார் விரைந்து வந்து பிரவீன் உடலை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்,

விமான படை பாதுகாப்பு வீரர் பிரவீன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை.

குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணியில் ஏதேனும் மன உளைச்சல் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விமான படை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சூலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News