செய்திகள்
கோயம்பேடு தே.மு.தி.க. அலுவலகம் மீது கல் வீசியவர் கைது
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடந்த சம்பவத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த் வாலிபர் கைது செய்யப்பட்டார்
சென்னை :
சென்னை கோயம்பேட் டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கல்வீசி தாக்குதல் நடத்தப் பட்டது.
இதில் அலுவலகத்தின் முன் பகுதியில் சுவற்றில் பொறுத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இதுபற்றி தே.மு.தி.க. தொழிற்சங்க துணை தலைவர் காளிதாசன் கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட் டது யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதில் துப்பு துலங்கியது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (34) என்ற வாலிபர்தான் தே.மு.தி.க. அலுவலகத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. அவரை நேற்று இரவு போலீசார் மடக்கி பிடித்தனர்.
சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.