செய்திகள்

சிவகங்கை அருகே வாகன சோதனையில் ரூ.80 ஆயிரம் சிக்கியது

Published On 2016-04-24 19:21 IST   |   Update On 2016-04-24 19:21:00 IST
சிவகங்கை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது டாடா சுமோ காரில் இருந்து ரூ.80 ஆயிரம் சிக்கியது.

சிவகங்கை:

சிவகங்கையில் இருந்து சிங்கம்புணரிக்கு இன்று காலை டாடா சுமோ கார் ஒன்று சென்றது. காரை குமார் என்பவர் ஓட்டி சென்றார்.

சிவகங்கை அம்பேத்கார் சிலை அருகே தேர்தல் நிலைக்குழு தாசில்தார் கருப்பையா தலைமையில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காரில் ரூ.80 ஆயிரம் இருந்தது. டிரைவர் குமாரிடம் பணம் கொண்டு செல்ல ஆவணங்கள் உள்ளதா? என கேட்டனர். அதற்கு அவர் இல்லை என்றார். இதனை தொடர்ந்து ரூ.80 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Similar News