செய்திகள்
திருப்புவனம் பகுதியில் உள்ள தேர்தல் வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
திருப்புவனம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி மானாமதுரை தொகுதியில் உள்ள ஏனாதி, பூவந்தி, மணலூர், பசியாபுரம், பொட்டப்பாளையம், சாயனாபுரம், கரிசல்குளம் உள்பட பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தும், மக்கள் அனைவரும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழியை வைத்தார். மக்கள் அதனை ஒப்புக் கொண்டனர்.
இவருடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், புதுவாழ்வு திட்ட அதிகாரி சரவணன், புருசோத்தமன், துணை தாசில்தார் சிவராமன், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ஜேசு, பூவந்தி இன்ஸ்பெக்டர் பாலாஜி, ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.