உள்ளூர் செய்திகள்
மாற்று கட்சியை சேர்ந்த 2 ஆயிரம் பேர் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி
- ஓசூரில் மாற்று கட்சியை சேர்ந்த 2 ஆயிரம் பேர் தி. மு.கவில் இணையும் நிகழச்சி நடைபெற்றது.
- மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஓசூரில் மாற்று கட்சிகளி லிருந்து 2,000 பேர் விலகி, நேற்று தி.மு.கவில் சேர்ந்த னர். இதையொட்டி, ஓசூர் மூக்கண்ட பள்ளியில் நடந்த விழாவிற்கு மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்று கட்சிகளிலிருந்து விலகிய 2,000 பேர் தி.மு.க. வில் சேர்ந்தனர். அவர்களை வரவேற்று பிரகாஷ் எம்.எல்.ஏ. விழாவில் பேசினார்.
மேலும் இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.