உள்ளூர் செய்திகள்

குரங்குகள் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டன.

பொதுமக்களை அச்சுறுத்திய 20 குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன

Published On 2023-03-07 09:59 GMT   |   Update On 2023-03-07 09:59 GMT
  • குடிக்காடு கிராமத்தில் பிரத்யேக கூண்டு தயார் செய்து வைத்திருந்தனர்.
  • 2 நாட்களில் அந்த கூண்டில் 20 குரங்குகள் பிடித்து அடைத்து வைக்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன் குடிக்காடு கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்பட்டது.

வீட்டின் மாடிகளில் காய வைக்கப்பட்ட துணிகள், பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடியது.

வீட்டுக்குள் புகுந்து மளிகை பொருட்கள், தின்பண்டங்களை தூக்கி ஓடி தெருவில் வீசி நாசப்படுத்தியது.

மேலும் வீட்டின் மேற்கூறையில் ஏறி ஓட்டை பிரித்து சேதப்படுத்தியது.

கடந்த 6 மதங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி வனத்துறையினர் 2 நாட்களுக்கு முன்பு குரங்க்களை பிடிப்பதற்காக வேங்கைராயன் குடிக்காடு கிராமத்தில் பிரத்யேக கூண்டு தயார் செய்து வைத்திருந்தனர்.

அந்தக் கூண்டில் பட்டாணி, பொறி உள்ளிட்ட குரங்குகளுக்கு பிடித்த பண்டங்களை வைத்தனர்.

மேலும் குரங்குகள் பிடிப்பவர்களையும் அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் 2 நாட்களில் அந்த கூண்டில் 20 குரங்குகள் பிடித்து அடைத்து வைக்கப்பட்டன.

இந்த குரங்குகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவதற்கு வனத்துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து அடுத்த கட்டமாகவும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News