உள்ளூர் செய்திகள்

சாலையில் சுற்றித்திரிந்த நாயை, பணியாளர்கள் வலைவீசி பிடித்தபோது எடுத்த படம்.

நெல்லை மண்டலத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய 20 நாய்கள் பிடிபட்டது

Published On 2023-05-31 14:46 IST   |   Update On 2023-05-31 14:46:00 IST
  • டவுன் மண்டல பகுதியில் அதிக அளவு நாய்கள் சுற்றி திரிவதாக புகார்கள் வந்தன.
  • பாட்டப்பத்து, அரசன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 20-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை டவுன் மண்டல பகுதியில் அதிக அளவு நாய்கள் சுற்றி திரிவதாகவும் இதனால் சிறுவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் காலையில் நடமாட அச்சப்படுவதாகவும் மாநகராட்சி கமிஷனருக்கு புகார் மனுக்கள் வந்தன.

இதையடுத்து கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் இன்று பிடிக்கப்பட்டது.

இதில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உதவியுடன் பாட்டப்பத்து, அரசன்நகர், கிருஷ்ணபேரி, பெரியதெரு, நடுத்தெரு, குற்றாலம்ரோடு, ஆசாத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.

Tags:    

Similar News