உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
- தனியார் மில்லில் வேலை பார்ப்பவர் மற்றும் தனியார் கல்லூரி மாணவி மாயமாகி உள்ளனர்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (21). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. ராஜலட்சுமி குறித்து விசாரித்தும் தகவல் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் கலையரசி (18). இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று விழாவிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.