உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
வேடசந்தூர் அருகே பைக்கில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
- தனிப்படை போலீசார் தட்டாரபட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- அப்பொழுது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல்:
வேடசந்தூர் அருகே தட்டாரப்பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தட்டாரபட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தட்டாரபட்டியை சேர்ந்த சசிகுமார் (வயது 30), திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (20) என்பதும் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சா, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.