உள்ளூர் செய்திகள்
பேக்கரி உரிமையாளர் உள்பட 2 பேர் மாயம்
- வீட்டை விட்டு புறப்பட்ட ரமேஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
- அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 35). இவர் பேக்கரி நடத்தி வருகிறார்.
கடந்த 13-ந்தேதி அன்று பேக்கரிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்ட ரமேஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது மனைவி சித்ரா (31) கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரமேஷை தேடி வருகின்றனர்.
இதேபோல இட்டிகல் அகரம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் வீட்டை விட்டு மாயமாகி விட்டார்.
இவரை அதே பகுதியை சேர்ந்த திருப்பதி என்ற வாலிபர் விட்டதாக பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.