உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
- குடிப்பழக்கம் மற்றும் குடும்ப பிரச்சினையால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே ஆண்டிபட்டி பழையகோட்டையை சேர்ந்தவர் பெருமாள் (வயது28). குடி பழக்கத்துக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது தந்தை அறிவுரை கூறி உள்ளார்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கீரிதோடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (55). குடும்ப பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் கூடலூர் தம்மணம்பட்டி அருகே உள்ள தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார்விசாரித்து வரு கின்றனர்.