உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

போடியில் சந்தன மரக்கட்டைகள் கடத்தல் 2 பேர் கைது

Published On 2022-12-03 05:34 GMT   |   Update On 2022-12-03 05:45 GMT
  • டாப்ஸ்டசேன் அருகே உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த சந்தனமரத்தை வெட்டி அதன் பட்டைகளை சீவி எடுத்துக்கொண்டு தப்பினர்
  • 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா(61). வினோபாஜிகாலனியை சேர்ந்தவர் சின்னன்(55). இருவரும் நண்பர்கள். வனப்பகுதியில் வேட்ைடயாடுவதும், விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்துவதும் சிறுவயதில் இருந்தே வாடிக்கையாக செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை குரங்கணி மலைப்பகுதியில் டாப்ஸ்டசேன் அருகே உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த சந்தனமரத்தை வெட்டி அதன் பட்டைகளை சீவி எடுத்துக்கொண்டு தப்பினர்.

அதே நேரத்தில் ரோந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் பஸ்நிறுத்தம் அருகே ராஜா, சின்னனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை கண்டறிந்து இருவரிடமும் விசாரித்தனர். இந்த சோதனையில் இருவரும் அவர்கள் பையில் வைத்திருந்த சீவப்பட்ட சந்தனமரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர் வழக்குபதிவு செய்து போடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தமபாளையம் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News