கஞ்சா விற்றதை தட்டிக் கேட்ட வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
- ஏரி ரோடு பகுதியில் நடந்து சென்றபோது சில நபர்கள் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தனர்.
- கஞ்சா கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி அவருக்கு மிரட்டல்
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு கேபி கரடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ( வயது 26). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது உறவினரை பார்க்க தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சில நபர்கள் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த அவர் அதைத் தட்டிக் கேட்ட போது, கஞ்சா கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு, மோதல் ஏற்பட்டு, ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்ட னர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கஞ்சா விற்பனை செய்த தாதகாப்பட்டி கேட் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த கலைவாணி ( வயது41), அம்மாள் ஏரி ரோடு பகு தியைச் சேர்ந்த பிரபாகரன் என்கிற முட்டைக்கண் பிரபு (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.39,100 பணம், 260 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.