உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ரேசன் கடையில் இருந்து கடத்தி வீடுகளில் பதுக்கி வைத்த 12 டன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது

Published On 2022-11-19 12:15 IST   |   Update On 2022-11-19 12:15:00 IST
  • பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இருந்து மூடை மூடையாக ரேசன் அரிசியை கடத்தி வந்து வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
  • 12 டன் மதிப்பிலான 300 மூடை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

பெரியகுளம்:

தேனிமாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இருந்து மூடை மூடையாக ரேசன் அரிசியை கடத்தி வந்து வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இவ்வாறு கடத்தப்படும் ரேசன் அரிசி பட்டை தீட்டுவதற்காகவே ரைஸ் மில்களும் உதவி செய்து வருகின்றன. அந்த மில்களில் ரேசன் அரிசி குருனையாகவும், மாவாகவும் அரைக்கப்பட்டு மாற்றப்படுகிறது.

மேலும் இவை இட்லி மாவு, தோசை மாவு தயாரிக்க விற்பனை செய்யப்படுகிறது. டன் கணக்கில் ரேசன் அரிசி சேர்த்து வைக்கப்பட்டு லாரிகள் மூலம் கேரளா வுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் பெரிய குளம் வட்டாட்சியர் காஷா ஷெரிப்பிற்கு அரிசி கடத்தல் தொடர்பாக ரகசிய புகார் வந்தது. இதனை அடுத்து அவர் சம்பவ இடத்திற்கு சென்ற போது லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து மூடை மூடையாக ரேசன் அரிசி லாரிகளில் ஏற்றபடுவதை கண்டறிந்து கையும் களவுமாக பிடித்தார்.

மேலும் அவரது வீட்டிற்குள்ளும் அரிசி மூடைகள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பெரியகுளம் டி.எஸ்.பி. கீதா தலைமையிலான போலீசார் வந்தனர். அவர்கள் ரேசன் அரிசியை கடத்திய லாரி டிரைவர் சத்தியநாராயணன் மற்றும் லட்சுமணன் ஆகி யோரை கைது செய்தனர்.

லாரி பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் 12 டன் மதிப்பிலான 300 மூடை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் ெதாடர்பாக மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரி பால முருகன் தெரிவிக்கையில், ரேசன் அரிசியை கடத்தி விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு இது குறித்து தகவல் தெரிந்தால் புகார் அளிக்கலாம் என்றார்.

Tags:    

Similar News