உள்ளூர் செய்திகள்

குளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரிகள்.


கடையநல்லூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த 2 லாரிகள் குளத்தில் விழுந்தது

Published On 2022-06-11 09:49 GMT   |   Update On 2022-06-11 09:50 GMT
  • கடையநல்லூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த 2 லாரிகள் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
  • அதிர்ஷ்டவசமாக 2 லாரிகளிலும் இருந்த டிரைவர், கிளீனர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகே அட்டை குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் அதன் கரைகள் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அந்த வழியாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ராஜபாளையத்தில் இருந்து கேரளாவிற்கு சென்றது.

கடையநல்லூர் அருகே சென்ற பொழுது அந்த வழியாக பாதுகாப்பு பணிக்காக 20-க்கும் மேற்பட்ட போலீசார் ஒரு வேனில் தென்காசியில் இருந்து கடையநல்லூருக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக இந்த வேன் மீது லாரி மோதியது. பின்னர் அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றொரு சிமெண்ட் லாரி மீதும் மோதியது.இதில் லாரி டயர்கள் வெடித்து சுற்றுச்சுவரில் மோதி நின்றது.

இதனால் குளத்தின் சுற்றுச்சுவர் மற்றும் சாலை சேதமடைந்தது. பாரம் தாங்காமல், 2 லாரிகளும் குளத்திற்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக 2 லாரிகளிலும் இருந்த டிரைவர், கிளீனர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

Tags:    

Similar News