உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் விஷம் குடித்த 2 சாவு

Published On 2023-06-23 15:19 IST   |   Update On 2023-06-23 15:19:00 IST
  • பழனிசாமி மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்
  • பழனிசாமி மீண்டும் மதுக்குடித்து வந்தால் கணவன்-மனைவி இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலை பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வந்தார். கால்டாக்சி டிரைவரான இவருக்கு ரேவதி என்ற மனைவியும் உள்ளார். சேலம் மாவட்டம் வெப்பாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக ஓசூருக்கு வந்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பழனிசாமி மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி பழனிசாமி மீண்டும் மதுக்குடித்து வந்தால் கணவன்-மனைவி இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த பழனிசாமி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரேவதி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி ஓசூரை அடுத்த பாகலூர் தளாபேட்டை சேர்ந்தவர் சச்சின் (23). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனை அவரது பெற்றோர்கள் தட்டி கேட்டார். இதனால் மனவேதனை அடைந்த சச்சின் கடந்த 15-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம்குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News