உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் வட்டார தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் ஆங்கில பயிற்சி

Published On 2023-08-13 14:12 IST   |   Update On 2023-08-13 14:12:00 IST
  • கடந்த 11-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை 12 கட்டங்களாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • மாணவர்களை எளிதாக ஆங்கிலம் வாசிக்க வைப்பதற்கான முறைகள் குறித்து சிறப்பு கருத்தாளர் ஆர்த்தி பயிற்சி அளித்தார்.

சங்கரன்கோவில்:

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலத்திறனை மேம்படுத்துவதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை பலவிதமான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது.

இதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு முழுவதும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "ஜாலி போனிக்ஸ்" என்ற பெயரில் ஆங்கில ஒலிப்பு பயிற்சி மற்றும் ஒலியின் அடிப்படையில் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளை எளிதில் வாசிக்க வைப்பது தொடர்பான பயிற்சி 2 நாட்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா வழிகாட்டுதலின்படி கடந்த 11-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை 12 கட்டங்களாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதல் கட்ட பயிற்சியானது சங்கரன்கோவில் வட்டார தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கரிவலம்வந்தநல்லூர் ஆ.ம.செ.அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. பயிற்சியினை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சீவலமுத்து தலைமை தாங்கி தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கங்கள் குறித்து பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன் வரவேற்று பேசினார். மேலும், குழந்தை மைய வழிமுறையில் உச்சரிப்பு, ஒலி முறையின் அடிப்படையில் மாணவர்களை எளிதாக ஆங்கிலம் வாசிக்க வைப்பதற்கான முறைகள் குறித்து சிறப்பு கருத்தாளர் ஆர்த்தி பயிற்சி அளித்தார். பயிற்சியில் சங்கரன்கோவில் வட்டாரத்தை சேர்ந்த 79 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன், சங்கரன்கோவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துச்செல்வி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News