உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பணம் தராததால் ஆத்திரம்: அய்யலூரில் விவசாயியை கொன்ற 2 சிறுவர்கள் கைது

Published On 2023-11-05 07:13 GMT   |   Update On 2023-11-05 07:13 GMT
  • அய்யலூர் அருகே கோம்பை வனப்பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
  • பணத்தகராறில் விவசாயியை கொன்ற 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே கோம்பை வனப்பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெ க்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் இறந்த நபர் அய்யலூர் அருகே மாமரத்து ப்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது41) என தெரிய வந்தது.

இது தொடர்பாக வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இதில் தபால்புள்ளி, கோம்பையை சேர்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் அவரை கொன்றது தெரிய வந்தது.

2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது:-

முருகேசன் விவசாயம் மட்டுமின்றி இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்து வந்தார். இதனால் அவரிடம் நிறைய பணம் இருக்கும் என எண்ணினோம். இதனால் மது குடிக்க வனப்பகுதிக்கு அழைத்து சென்றோம். அங்கு போதை தலைக்கேறிய நிலையில் அவரிடம் பணம் கேட்டோம். ஆனால் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்து தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து அவர் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். அவர்களிடம் இருந்து தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது. முருகேசனுக்கு கண்மணி என்ற மனைவியும், ரங்கநாதன், சிவா என 2 மகன்களும் உள்ளனர். கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீ சார் 8 மணி நேர த்தில் அவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News