உள்ளூர் செய்திகள்
பெண் பயணியிடம் நகை திருடிய 2 பேர் கைது
- பையில் நகை மாயமாகி இருந்தது.
- திருடர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்சிப்பை சேர்ந்தவர் அஸ்வினி (29). இவர் சென்னையில் இருந்து பஸ்சில் ஓசூருக்கு வந்தார். பஸ் நிலையத்தில் இறங்கிய போது பையை பார்த்தார். அப்போது பையில் நகை மாயமாகி இருந்தது.
அந்த நேரம் உடன் வந்த பயணிகள் 2 பேர் மீது சந்தேகம் அடைந்த அஸ்வினி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் 6 பவுன் நகை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்க ளிடம் நடத்திய விசார ணையில் அவர்கள் திரு வண்ணாமலை மாவட்டம் மேல்வத னவாடியை சேர்ந்த பீமன் (33), வீரமணி (30) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.