உள்ளூர் செய்திகள்

செம்மரங்கள் கடத்தல் வழக்கில் இருவர் தலைமறைவாக இருப்பதை அடுத்து அரூரில் ஆந்திர மாநில வனத்துறையினர் விசாரணை மேற்கொண்ட காட்சி.

செம்மரம் வெட்டி கடத்தல் வழக்கில் 2 பேர் தலைமறைவு

Published On 2023-07-27 09:21 GMT   |   Update On 2023-07-27 09:21 GMT
  • இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
  • ஆந்திர மாநில வனச்சரகர் வெங்கட் ரமணா தலைமையில், வனத்துறை அதிகாரிகள் வெளாம்பள்ளி, சித்தேரி மலை கிராமங்களுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அரூர்,

ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் வெட்டி கடத்தியதாக தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வெளாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சுந்தரவேலு (21), அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அருணாசலம் (32) ஆகியோரை அந்த மாநில வனத்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர்.

இந்த நிலையில் , நீதிமன்ற காவலில் இருந்து ஜாமீனில் இருவரும் வெளி வந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆந்திர மாநில வனச்சரகர் வெங்கட் ரமணா தலைமையில், 5 பேர் கொண்ட வனத்துறை அதிகாரிகள் வெளாம்பள்ளி, சித்தேரி மலை கிராமங்களுக்கு வந்து தலைமறைவாக இருப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் போது அரூர் வனச்சரகர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழக வனத்துறையினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News