கிருஷ்ணகிரி நகராட்சி 16-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி- நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
- கிருஷ்ணகிரி நகராட்சி வார்டில் கால்வாய் கட்டும் பணி நடக்கிறது.
- நகராட்சி தலைவர் அதை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நக ராட்சிக்கட்பட்ட 16-வது வார்டு லண்டன்பேட்டை சாந்திநகரில், பல ஆண்டு களாக கழிவுநீர் கால்வாய் சீரமைக்காததால், கழிவுநீர் சாலையில் ஓடியது. இதனால் இப்பகுதியில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து வார்டு உறுப்பினர் விநாயகத்தின் வேண்டுகோளின் பேரில், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் நகராட்சி தலைவர் பரிதாநவாப் பங்கேற்று, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர் விநாயகம், புஷ்பா, வட்டச் செயலாளர்கள் கண்ணன், ஆண்ட்ரோஸ், வட்டப் பிரதிநிதி சோபி, காங்கிரஸ் கட்சியின் நகர துணைத் தலைவர் குமார் மற்றும் கனல்சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.