உள்ளூர் செய்திகள்

சூலூரில் ஒரே வாரத்தில் 16 கடைகளில் கொள்ளை

Published On 2022-09-20 09:21 GMT   |   Update On 2022-09-20 09:21 GMT
  • சுல்தான்பேட்டையில் தொடர்ச்சியாக ஆறு கடைகளில் திருட்டு நடைபெற்றுள்ளது.
  • கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

சூலூர்,

கோவை மாவட்டம் சூலூர் மார்க்கெட் ரோடு பகுதியில் கடந்த 18-ந் தேதி இரவு 2 கடைகளை உடைத்து திருட்டு நடைபெற்றது.

இதேபோல் சுல்தான்பேட்டையில் தொடர்ச்சியாக ஆறு கடைகளில் திருட்டு நடைபெற்றுள்ளது.

அதேபோல் 17-ந் தேதி இரவு சூலூர் கலங்கல் ரோடு பகுதியில் தொடர்ச்சியாக 6 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றது. கடந்த 7 நாட்களுக்கு முன்பாக மேலும் 2 கடைகளில் திருட்டு நடைபெற்று இருந்தது. இந்த கடைகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமாக கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சூலூர் சுன்தான் பேட்டை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கி டையே கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தனிப்படையினர் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

இதுதவிர சூலூர் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.இது சம்பந்தமாக வியாபாரிகள் கூறுகையில், மளிகை கடை நடத்துபவர்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் வைத்திருப்போர் தினமும் தங்களது கடைகளில் திருட்டு நடந்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம்.

இது சம்பந்தமாக வியாபாரிகள் பேரவையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கடைகளின் பாதுகாப்புக்கு மற்றும் வியாபாரிகளின் பொருள்களின் பாதுகாப்புக்கும் தனியாக பாதுகாவலர்களை நியமிப்பது என முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News