ஒரு வருடத்தில் 1500 பேருக்கு ஆஞ்சியோகிராம்... சாதனையை கொண்டாடிய ரேலா மருத்துவமனை
- ரேலா மருத்துவமனை ஆற்றிய ஓராண்டு சேவைகள் குறித்து விளக்கப்படம் ஒளிபரப்பப்பட்டது.
- செரியன் ஹார்ட் பவுண்டேஷன் நிறுவனர் கே.எம். செரியன் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டார்.
திருவள்ளூர்:
சோழவரம் அடுத்த பாடியநல்லூரில் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் எம்.எஸ். மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, இதயத்தில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை சரி செய்யும் ஆஞ்சியோகிராம் எனப்படும் சிகிச்சை முறையினை 1500 பேருக்கு செய்து சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையிலும் ரேலா மருத்துவமனையின் ஓர் ஆண்டு நிறைவிழாவை முன்னிட்டும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் எம்.எஸ். மருத்துவமனையின் நிறுவனரும் உலக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவருமான பேராசிரியர் முகம்மது ரேலா மற்றும் செரியன் ஹார்ட் பவுண்டேஷன் நிறுவனர் பத்மஸ்ரீ கே.எம். செரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கியதும் கண் கவர் பரதநாட்டியம் நடைபெற்றது. பின்னர் ரேலா மருத்துவமனை ஆற்றிய ஓராண்டு சேவைகள் குறித்து விளக்கப்படம் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அப்பல்லோ இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் செங்குட்டு வேலு மற்றும் டாக்டர் ஆனந்த் ஞானராஜ், ரேலா மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொகுப்பினை ரேலா மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் அசோக் குமார்,டாக்டர் அஸ்வாமி ஆகியோர் செய்து இருந்தனர். இதில் ஏராளமான மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.