உள்ளூர் செய்திகள்
சின்னசேலம் அருகே அரசு சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
- பஸ் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னசேலம்:
கேரளாவில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கேரளாஅரசு சொகுசு பஸ் வடலூர், நெய்வேலி வழியாக புதுச்சேரி சென்றது. இந்த சொகுசு பஸ் கள்ளக்குறிச்சி மாவட்டம் வி. கூட்ரோடு பகுதியை கடக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்த பயணிகளை சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.