உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

அய்யலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி 14 பேர் படுகாயம்

Published On 2023-11-08 11:21 IST   |   Update On 2023-11-08 11:21:00 IST
  • லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதி நிலைதடுமாறிய லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.
  • விபத்தில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வடமதுரை:

பழனியில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் சென்றது. இதில் 55 பயணிகள் இருந்த னர். பஸ்சை கருங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் ஓட்டிவந்தார். கண்டக்டராக நல்லுசாமி பணியில் இருந்தா ர். இேத போல் ஒட்டன்சத்தி ரத்தில் இருந்து திருச்சிக்கு காய்கறி ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. திண்டுக்கல்- திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே தங்கம்மாபட்டி பகுதியில் லாரி பழுதடைந்ததால் அதனை ஓரமாக நிறுத்த டிரைவர் மெதுவாக ஓட்டிச்சென்றார்.

நள்ளிரவு சமயம் என்பதால் பின்னால் வந்த அரசு பஸ் டிரைவருக்கு லாரி மெதுவாக செல்வது தெரியவில்லை. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.

பஸ்சில் வந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து அலறினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு போலீசார் மற்றும் சுங்கச்சாவடி படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சில் பயணம் செய்த மணப்பாறையை சேர்ந்த நல்லுச்சாமி(49), வள்ளி(52), கருங்குளம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணராஜ்(50), உடுமலைப்பேட்டை தேவ ராஜ்(55), காட்டுமன்னார்குடி ரோஜாவள்ளி, சென்னை யை சேர்ந்த சிவக்குமார், திருச்சியை சேர்ந்த பிரபா கரன், லட்சுமி, பஸ் டிரைவர் கிருஷ்ணராஜ்(55) உள்பட 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அவர்களை மீட்டு திண்டுக்கல் மற்றும் மண ப்பாறை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News