விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
போட்டிபோட்டு ஓட்டியதால் விபத்து மினிலாரி மீது அரசு பஸ் மோதி 14 பேர் படுகாயம்
- தேனி சாலையில் 2 பஸ்டிரைவர்களும் போட்டி போட்டு ஓட்டினர். ஒருவரை யொருவர் முந்திசெல்ல முயன்றனர்.
- லாரியும், பஸ்சும் மோதிய விபத்தில் 14 பேர் படுகாயமடைந்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் இருந்து மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு தனியார் பஸ் சென்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதேபோல் வெள்ளிமலையில் இருந்து போடிக்கு அரசு பஸ் சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். வருசநாடு-தேனி சாலையில் 2 பஸ்டிரைவர்களும் போட்டி போட்டு ஓட்டினர். ஒருவரை யொருவர் முந்திசெல்ல முயன்றனர்.
அப்போது திடீரென ஒரு பெண் பைக்கில் குறுக்கே வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க தனியார் பஸ் டிரைவர் பிரேக் போட்டார். இதனால் பின்னால் வந்த அரசு பஸ் கண்இமைக்கும் நேரத்தில் தனியார் பஸ் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த மினி லாரி மீதும் மோதி நின்றது. இதில் அரசு பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் ரோசனம்பட்டியை சேர்ந்த அருள்(35), செல்வம்(51), குமணன்தொழுவை சேர்ந்த முருகன்(42), குமுதா(40), ஆதிஸ்(4), மாரீஸ்வரன்(13), சீப்பாலக்கோட்டையை சேர்ந்த மோகன்(31), திவ்யா(30), மேகலா(27), தெய்வேந்திரபுரத்தை சேர்ந்த முத்துமாயக்காள்(40), ஜீவானந்தம்(4), ஆத்தங்கரை பட்டியை சேர்ந்த பசுபதி(75), அன்னத்தாய்(52), திருப்பூரை சேர்ந்த லட்சுமி(52) உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரண மாக தேனி-வருசநாடு சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.