உள்ளூர் செய்திகள்

சுற்றுலா பேருந்து-லாரி மோதி 14 பேர் காயம்

Published On 2023-01-22 14:47 IST   |   Update On 2023-01-22 14:47:00 IST
  • வெங்காய லோடு ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.
  • பேருந்தில் பயணித்த சுமார் 14-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இருந்து வெங்காய லோடு ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.

இதில் பேருந்தில் பயணித்த சுமார் 14-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். லாரி ஓட்டுநர் கை முறிவு அடைந்த நிலையில் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

மேலும் பலத்த காயம் அடைந்த நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News