உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 130 பேர் கைது

Published On 2023-09-12 15:32 IST   |   Update On 2023-09-12 15:32:00 IST
  • அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு களை தெரிவித்து வருகின்ற னர்.
  • 12 பெண் நிர்வாகிகள் உள்பட பா.ஜ.க. வினர் 130 பேரை கைது செய்து பஸ்சில் அழைத்துச் சென்றனர்.

தருமபுரி,  

தருமபுரியில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை –யிட முயன்ற பா.ஜ.க.வினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு களை தெரிவித்து வருகின்ற னர். இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சனா–தனம் குறித்து பேசியதால், அவரை பதவி விலக வலி யுறுத்தி பா.ஜ.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் சனாதன தர்மத்தை அழிக்க துடிக்கும், இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு இருவரும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி இந்து அறநிலை யத்துறை அலுவல–கத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டனர்.

அப்பொழுது அமைச்சர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய வாறு இந்து அறநிலையத்–துறை அலு–வலகத்தை முற்று கையிட முயற்சி செய்தனர். இதனையடுத்து பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த போலீசார் 12 பெண் நிர்வாகிகள் உள்பட பா.ஜ.க. வினர் 130 பேரை கைது செய்து பஸ்சில் அழைத்துச் சென்றனர்.

அவர்களை அங்குள்ள தனியார் திருமண மண்ட பத்தில் தங்க வைத்து சிறிது நேரம் கழித்து அனுப்பி வைத்தனர். இந்த போராட்ட சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News