உள்ளூர் செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு பெற்றவருக்கு தீர்வுக்கான சான்றிதழை வழங்குகிறார் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின். 

தஞ்சை மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1281 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2023-05-14 09:33 GMT   |   Update On 2023-05-14 09:33 GMT
  • நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
  • மொத்தம் 3494 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1281 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தலைமை வகித்தார்.கூடுதல் சார்பு நீதிபதி முருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதி, வழக்குரைஞர் முல்லை ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.மோட்டார் வாகன வழக்குகளுக்கான சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி, குற்றவியல் நீதித்துறை நடுவர் முருகேசன், வழக்குரைஞர் மகா சண்முகம் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது.இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3494 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1281 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, ரூ. 4 கோடியே 23 லட்சத்து 52 ஆயிரத்து 902 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடி களுக்கு பெற்றுத் தரப்ப ட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News