உள்ளூர் செய்திகள்

12-ந்தேதியுடன் நிறைவு சேலம் அரசு பொருட்காட்சியை 1.17 லட்சம்பேர் பார்வையிட்டனர்

Published On 2022-10-05 10:36 GMT   |   Update On 2022-10-05 10:36 GMT
  • சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • அரசு பொருட்காட்சி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் வருகின்ற 12-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறவுள்ளது.

சேலம்:

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் அடங்கிய பொழுதுபோக்கு அம்சங்க–ளுடன் கூடிய சேலம் அரசு பொருட்காட்சி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சேலம் மாநகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுற–வுத்துறை, வருவாய்துறை, சமூகநலத்துறை, தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தனியார் அரங்குகள் மற்றும் குழந்தைகளுக்கென அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் இப்பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் 35 நாட்களாக மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் சேலம் அரசுப் பொருட்காட்சியினை இதுவரை பெரியவர்கள், குழந்தைகள் என மொத்தம் 1.17 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நடை–பெற்று வருகின்ற அரசு பொருட்காட்சி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் வருகின்ற 12-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பொருட்காட்சிக்கு அனைவரும் வருகைதந்து பார்த்து பயனடைய வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News