உள்ளூர் செய்திகள்

சாலையில் கிடந்த பணத்தை போலீசிடம் ஒப்படைத்த லாரி உரிமையாளர் அஸ்லாம் பாஷா.

சாலையில் கிடந்த 11 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த லாரி உரிமையாளர்

Published On 2022-06-08 15:29 IST   |   Update On 2022-06-08 15:29:00 IST
  • சாலையில் கிடந்த பணத்தை லாரி உரிமையாளர் போலீசில் ஒப்படைத்தார்.
  • அவரின் நேர்மையை பாராட்டி போலீசார் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா (42). லாரி அதிபரான இவர் தனது தாய் ஜமீலுநிஷாவை சிகிச்சைக்காக தருமபுரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். தருமபுரி பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து விட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்ததில் அதில் 11 ஆயிரம் பணம் இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து சிறிது நேரம் அதே இடத்தில் நின்று பணத்தை தவற விட்டவர்கள் யாராவது தேடி வருகிறார்களா? என காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் யாரும் வராததால் தருமபுரி நகர போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.

அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸிடம் அந்த பணத்தை ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொண்டார், அஸ்லாம் பாஷாவின் நேர்மையை பாராட்டி இன்ஸ்பெக்டர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் சமூக வலைதளங்களிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குலவன்பட்டி சாலையில் திருமண மண்டபம் அருகே கிடந்த ரூ.30 ஆயிரத்தை எடுத்த கார்த்திக் (வயது 34) என்ற வாலிபர் அந்த பணத்தை சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனிடம் ஒப்படைத்தார். அவரை பாராட்டிய போலீசார் பணத்தை தொலைத்தவர்கள் உரிய தகவல்களை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Similar News