உள்ளூர் செய்திகள்

11 கூரை வீடுகள் எரிந்து நாசம்

Published On 2023-06-17 07:32 GMT   |   Update On 2023-06-17 07:35 GMT
  • பல மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
  • வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வண்டலூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது45). நேற்று மின்கசிவு காரணமாக இவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது.

அப்போது காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவி வண்டலூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த தமிழரசி , வெங்கடேசன், பாப்பையன், ராஜேந்திரன், ராஜேஷ் கண்ணா, மதீஷ் ராஜ், சுப்பிரமணியன், அரவிந்த் , பெரியசாமி, ராகுல் ஆகியோ ரின் கூரைவீடுகளுக்கும் பரவியது.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை, கீழ்வேளூர், வேளா ங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட 4 தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து பல மணிநேரம் போராட்ட த்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

ஆனாலும் இந்த தீவிபத்தில் 11 கூரைவீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலானது. மேலும் வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்து சேதமானது.

இந்த தீவிபத்தில் ஒரு ஆடும் இறந்தது.

இதன் சேதமதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் அமைச்சர் ரகுபதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினர்.

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News