உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை நடந்தபோது எடுத்த படம்.

தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை

Published On 2023-08-13 08:56 GMT   |   Update On 2023-08-13 08:56 GMT
  • பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி கடந்த 8-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் கால்நாட்டு விழா நடைபெற்றது.
  • நேற்று இரவு மழை வளம் தொழில்வளம் பெருகவேண்டும் ஆகியவற்றிற்காக சிறப்பு பஜனையுடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி பிரையண்டநகர் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி யம்மன் கோவில் கொடை விழாவையொட்டி கடந்த 8-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் கால்நாட்டு விழா நடைபெற்றது.

நேற்று இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம் பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக சிறப்பு பஜனையுடன் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா முத்துராஜன், பொருளாளர் ஐகோர்ட் துரை, கொடைவிழா தலைவர் முருகேசன், திருப்பணி குழு தலைவர் பசுபதி, துணை தர்ம கர்த்தாக்கள் துரைராஜ், பாக்கியநாதன், மாடசாமி, வன்னிராஜ், ராஜவேல், ராமசந்திரன், துணைச்செயலாளர்கள் பொன்ராஜ், மணிராஜ், வேம்படி துரை, ஆத்திமுத்து குமார், ஜெயபால், சிவலிங்க ராஜா, ஜெயபால், ஜெயக்குமார், கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள், மகளிர் அணியினர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News