உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம்

Published On 2023-03-10 09:28 GMT   |   Update On 2023-03-10 09:28 GMT
  • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் நடந்தது
  • கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழியம்மன் உள்பட அனைத்து சன்னதிகளிலும் அபிஷேகம் செய்யப்பட்டது.

திருவாரூர் :

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஹோமம் தொடங்கியது.

தொடர்ந்து கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழியம்மன் உள்பட அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.

மதியம் பூர்ணாகுதியும் அதனைத்தொடர்ந்து குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் செயல்அலுவலர் மணவழகன், கோவில்கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News