உள்ளூர் செய்திகள்

பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றுகளை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

100 பயனாளிகளுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றுகள்- கலெக்டர் வழங்கினார்

Published On 2023-05-24 09:30 GMT   |   Update On 2023-05-24 09:30 GMT
  • இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
  • எங்களுடைய பல நாள் கனவு நிறைவேறி உள்ளது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் துறை சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றுகளை 100 பயனாளிகளுக்கு கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று வழங்கப்படுகின்றது. இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும். நரிக்குறவர் இன மக்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து பழங்குடியினர் இன ஜாதி சான்று பெற்ற நரிக்குறவர் சமுதாய பெண் ரம்பா (வயது 26) கூறியதாவது:-

நரிக்குறவர் சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இது எங்களுடைய பல நாள் கனவு. முதல்-அமைச்சர் எங்கள் நரிக்குறவர் இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இன்று மாவட்ட கலெக்டரால் இந்த பழங்குடி யினர் ஜாதி சான்றிதழ் எங்களுக்கு கிடைக்க பெற்றிருக்கிறது. எங்களு டைய பல நாள் கனவு நிறைவேறி உள்ளது. இதற்கு முதல்- அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் நன்றி.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன், பல்லவராய ன்பேட்டை ஊராட்சி தலைவர் சேட்டு, நரிக்குறவர் இன மக்கள் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News