உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே பல்கலைக்கழக அதிகாரி வீட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை

Published On 2023-01-04 07:15 GMT   |   Update On 2023-01-04 07:15 GMT
  • வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
  • போலீசார் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழை க்கப்பட்டனர்.

கடலூர்:

சிதம்பரம் அருகே லால்புரம் அருகே காமராஜ்நகர் 3-வது குறுக்கு வீதியில் வசிப்பவர் செந்தில்நாதன் (வயது 38). இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு தனி அதிகாரியாக பணி செய்து வருகிறார். இவரது மனைவியும் பல்கலைக் கழகத்திலேயே பணி செய்வதால், 2 பேரும் காலையில் வீட்டை பூட்டிவிட்டு சென்று மதிய உணவிற்கும், மாலையில் வீட்டிற்கு வருவர்.

அதன்படி நேற்று காலை 10 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு கணவன், மனைவி 2 பேரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வேலைக்கு சென்றனர். மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த இவர்களால் வீட்டின் முன்கதவை திறக்கமுடியவில்லை. உள்பக்கம் பூட்டியிரு க்கலாம் என்ற சந்தேகத்தில் பின்பக்கமாக சென்று செந்தில்நாதன் பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 10 பவுன் தங்க நகை திருடப்பட்டு துணிகள் அனைத்தும் வெளியில் தூக்கிவீசப்பட்டிருந்தது.

இது குறித்து சிதம்பரம் தாலுக்கா போலீசாருக்கு செந்தில்நாதன் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை யிலான போலீசார் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழை க்கப்பட்டனர். கைரேகை நிபுணர்கள் கேரேகையை சேகரித்து எடுத்து சென்றுள்ளனர். காமராஜ் நகர் பகுதியைச் சுற்றிவந்த மோப்பநாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

இது தொடர்பாக சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர். பட்ட ப்பகலில் சிதம்பரம் நகரின் மையப்பகுதியில் கொள்ளைச் சம்பவம் நடந்தது அப்பகுதி மக்க ளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News