உள்ளூர் செய்திகள்

சன்மார்க்க சங்கத்தின் செயற்குழு கூட்டம்

Published On 2023-01-30 12:21 IST   |   Update On 2023-01-30 12:21:00 IST
  • தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடந்தது.
  • அன்னதானம் நடத்த தீர்மானம்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாராயணசாமி வரவேற்றார். திருச்சி மண்டல பொறுப்பாளர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் வரும் 5-ந் தேதி நடைபெற உள்ள தைப்பூச திருவிழாவை அனைத்து கிராம சங்கங்களிலும் சிறப்பாக நடத்துவது, பெரம்பலூரில் உள்ள ஆதரவற்றோர் மாணவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் அன்னதானம் செய்வது, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சன்மார்க்க சங்கங்களை ஏற்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பது, வள்ளலார் 200 விழாவை பெரம்பலூரில் சிறப்பாக நடத்துவது, பள்ளி, கல்லூரிகளில் சன்மார்க்க பேச்சு, கட்டுரை, ஓவியம் போட்டிகள் மற்றும் திருவருட்பா ஒப்புவித்தல் ஓவியப்போட்டி நடத்துவது, வடலூரில் தைப்பூசத்தன்று தர்ம சாலையில் சேவை செய்ய தொண்டர்களை அனுப்பி வைப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News