போட்டியில் வென்ற மாணவனுக்கு கலெக்டர் மகாபாரதி சான்றிதழ் வழங்கினார்.
கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட அளவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் என்ற வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழர் கலைஞரின் சுவடுகள்"என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது.
மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கட்டுரை போட்டியில் கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு பள்ளி 12-ம் வகுப்பு சந்தபடுகை கிராமத்தைச் சேர்ந்த மாணவன் முருகன் மாவட்டத்திலேயே 2-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இவருக்கு மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு மாணவர் முருகனுக்கு 2-ம் பரிசான ரூ. 7000 ரொக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர் முருகனை பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா, பெற்றோர் ஆசிரியர் தலைவர் தட்சிணாமூர்த்தி, தமிழ் ஆசிரியர் சாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.