செய்திகள்
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ஆர். அணிக்கு பின்னடைவு... துணைத் தலைவர் பதவியும் கிடைக்கவில்லை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையிலான அணி பின்னடைவை சந்தித்துள்ளது.
சென்னை:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் டி.ராஜேந்தர் அணிக்கும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணிக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், முரளி அணியின் கை ஓங்கியது.
தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் 337 வாக்குகள் பெற்று 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதேபோல் துணைத்தலைவர் தேர்தலிலும் டி.ராஜேந்தர் அணி தோல்வி அடைந்தது. அவரது அணியைச் சேர்ந்த யாரும் தேர்ந்தெடுக்கப்பவில்லை. முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் 475 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட கதிரேசன் 425 வாக்குகளும் பெற்று துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.