செய்திகள்

கோச்சடையான் வழக்கு- லதா ரஜினிகாந்த் விளக்கம்

Published On 2018-07-06 07:13 GMT   |   Update On 2018-07-06 07:13 GMT
கோச்சடையான் பட விவகாரம் தொடர்பாக லதா ரஜினிகாந்த் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். #Kochadaiiyaan #LathaRajinikanth
ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்துக்கு கொடுத்த கடன் தொகையில் ரூ.6.20 கோடி லதா ரஜினிகாந்த் பாக்கி வைத்திருப்பதாகவும் அதனை செலுத்த வேண்டும் என்றும் ஏட் பீரோ நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த 3-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது வருகிற 10-ந்தேதிக்குள் லதா ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் விசாரணையை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியதாக செய்திகள் வெளியாகின.

இதை மறுத்துள்ள லதா ரஜினிகாந்த் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எங்கள் தரப்பு வக்கீல் அறிவுறுத்தல் ஏதுமின்றி அவரது தரப்பு வக்கீல் தனது வாதத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் ஆணையில் குறிப்பிடப்பட்ட அளவிற்கு அவருடைய பொறுப்புகள் இல்லை. எனவே ஏப்ரல் 16 ம் தேதியிட்ட நீதிமன்ற ஆணை செயல்படுத்த முடியாததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரச்சனைக்குள் செல்லாமல் மனுக்களின் தகுதி மீதான விசாரணையை நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இறுதி விசாரணைக்காக வரும் 10-ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Kochadaiiyaan #LathaRajinikanth
Tags:    

Similar News