செய்திகள்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

Published On 2018-06-13 09:53 GMT   |   Update On 2018-06-13 09:53 GMT
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. #Theatre #Kaala
சென்னை:

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த 7-ந்தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது. படம் வெற்றிக்கரமாக ஓடி கொண்டிருக்கிறது. படத்திற்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில், காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர். #Theatre #Kaala
Tags:    

Similar News