செய்திகள்

'பாகுபலி-2' இந்திய திரைத்துறைக்கு பெருமை ரஜினிகாந்த் புகழாரம்

Published On 2017-04-30 23:53 IST   |   Update On 2017-05-01 00:08:00 IST
இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ள 'பாகுபலி-2' திரைபடத்தின் இயக்குநர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள 'பாகுபலி–2' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 'பாகுபலி-2' ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் 'பாகுபலி-2' படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-


'பாகுபலி-2' இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. 'பாகுபலி-2' படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் பாராட்டுகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News