செய்திகள்

நடிகர் கமல் ஹாசனின் அண்ணன் சந்திர ஹாசன் லண்டனில் காலமானார்

Published On 2017-03-19 09:44 IST   |   Update On 2017-03-19 09:44:00 IST
நடிகர் கமல் ஹாசனின் மூத்த சகோதரர் சந்திர ஹாசன் தனது 82-வது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார்.
லண்டன்:

நடிகர் கமல் ஹாசனின் மூத்த சகோதரர் சந்திர ஹாசன் தனது 82-வது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார்.

பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராக திகழ்ந்த டி. சீனிவாசன் மகனாக 1936-ம் ஆண்டு பிறந்த சந்திர ஹாசனும் வழக்கறிஞர் பட்டம் பெற்றவராவார்.

கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திர ஹாசன்(82), லண்டனில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாசன் வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர ஹாசனின் மனைவி கீதா மணி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் காலமானார் என்பது நினைவிருக்கலாம்.

Similar News