செய்திகள்

ஷாரூக்கானை பார்க்க குவிந்த ரசிகர் கூட்டத்தில் உயிரிழப்பு: விசாரணைக்கு போலீசார் உத்தரவு

Published On 2017-01-25 05:57 IST   |   Update On 2017-01-25 05:57:00 IST
குஜராத்தில் ஷாரூக்கான காண வந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ராயீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதிக்கு நேற்று முன் தினம் சென்றிருந்தார்.

அப்போது ராஜ்தானி விரைவு ரெயில் வண்டியில் சென்ற வந்த ஷாரூக்கானை காண ரசிகர்கள் குவிந்து இருந்தனர். அதனால் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்ப்பட்டது.

இரவு 10.30 மணிக்கு ரெயிலானது ரெயில் நிலையத்திற்கு வந்தது. சுமார் 10 நிமிடம் அங்கு ரெயில் நின்றிருந்தது. அந்த நேரத்தில் தான் ஷாரூக்கானை காண ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் உத்தரவிட்டுள்ளனர். வதோதரா ரெயில்வே எஸ்.பி ஷரத் சிங்கால் இதனை தெரிவித்தார்.

இந்த விசாரனை ரெயில்வே பிளாட் பார்மில் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக என்பது குறித்து முக்கியமாக விசாரணை செய்யும்.

Similar News