செய்திகள்

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு சிறப்பு விருது வழங்கிய பீட்டா

Published On 2017-01-13 19:32 IST   |   Update On 2017-01-13 19:33:00 IST
இந்தியாவில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் பிரபலமான வெளிநாட்டு அமைப்பான பீட்டா, கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு சிறப்பு விருது ஒன்றை வழங்கியுள்ளது.
புதுடெல்லி:

உலகின் சில நாடுகளில் விலங்குகள் நல அமைப்பு என்ற பெயரில் பீட்டா என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்தியாவில் விலங்குகளை பாதுகாப்பதாக கூறி வரும் இந்த அமைப்பில் பல்வேறு இந்திய பிரபலங்கள் உறுப்பினர்களாகவும், அதன் விளம்பர தூதர்களாகவும் இருக்கின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் ஆபாச நடிகையாக அறிமுகமாகி, இன்று கவர்ச்சி நடிகையாக மாறி இருக்கும் சன்னி லியோன் பீட்டா அமைப்பில் பல்வேறு விளம்பரங்களில் நடித்திருக்கிறார். தெருக்களில் இருக்கும் நாய்களை தத்து எடுக்க வலியுறுத்தும் விளம்பரங்களும் இதில் அடங்கும்.

இந்நிலையில் பீட்டா அமைப்பில் சன்னி லியோனின் பங்களிப்புகளை கருத்தில் கொண்டு பீட்டா சார்பில் 'ஆண்டின் சிறந்த நபர்' (Person of the Year) என்ற விருதை வழங்கியுள்ளது. இதனை சன்னி லியோன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சில மணி நேரங்களுக்கு முன் பதிவு செய்துள்ளார்.

இந்த தகவலை வீடியோ வடிவில் குறிப்பிட்ட சன்னி லியோன் தான் வெளியிட்ட வீடியோவில் பீட்டா வழங்கிய விருதிற்கு நன்றி தெரிவித்துள்ளார். 

Similar News