செய்திகள்
இந்தியாவில் ஹூன்டாய் i20 ஆக்டிவ் வெளியானது
ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட i20 ஆக்டிவ் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட i20 ஆக்டிவ் காரினை இந்தியாவில் சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளது. புதிய 2018 ஹூன்டாய் i20 ஆக்டிவ் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட ஹூன்டாய் i20 ஆக்டிவ் மாடலில் டூயல் டோன் மரினா புளு மற்றும் போலார் வைட் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துட் பிரவுன்/பிளாக் மற்றும் வைட்/பிளாக் டூயல் டோன் பெயின்ட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. புதிய பெயின்ட் ஸ்கீம் டாப் என்ட் மாடலான SX வேரியன்ட் இல் வழங்கப்படுகிறது.
இதுதவிர புதிய ஹூன்டாய் i20 ஆக்டிவ் மாடலில் புதிய பூட் லிட் அப்லிக் மற்றும் பின்புற ஆக்டிவ் லேபெள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வடிவமைப்பு ஒரே மாதிரி காட்சியளித்தாலும், பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்கள் காருக்கு ரக்கட் தோற்றத்தை வழங்குகிறது.
உள்புறத்தில் புதிய i20 மாடலில் பெரிய 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அம்சம் எலைட் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கேபின் சீட்டில் பாடி கலர்
அக்சென்ட்கள், டேஷ்போர்டு மற்றும் சீட் லெதரில் புதிய பேட்டன் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் என்ட் மாடலில் குழந்தைகளுக்கென ISOFIX வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஹூன்டாய் i20 ஆக்டிவ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 82 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் டீசல் இன்ஜின் 89 பிஹெச்பி பவர், 220 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டீசல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட ஹூன்டாய் i20 ஆக்டிவ் மாடலின் விலை மாற்றம் செய்யப்படவில்லை. i20 ஆக்டிவ் பேஸ் வேரியன்ட் விலை ரூ.6.99 லட்சம் மற்றும் டாப் என்ட் மாடல் விலை ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.