செய்திகள்
சர்வதேச மோட்டார் விழாவில் புதிய மாருதி எர்டிகா அறிமுகம்
புதிய தலைமுறை மாருதி எர்டிகா 2018 இந்தோனேஷிய சர்வதேச மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேஷியா:
2018 இந்தோனேஷிய சர்வதேச மோட்டார் விழாவில் புதிய தலைமுறை மாருதி எர்டிகா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது இந்த காரில் முற்றிலும் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை எர்டிகா மாடல் தற்போதைய மாடலை விட 99 மில்லிமீட்டர் நீளமாகவும், 40 மில்லிமீட்டர் அகலமாகவும், 5 மில்லிமீட்டர் அளவு உயரமாக இருக்கிறது. புதிய எர்டிகா சுசுகியின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம்-ஐ தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகியின் தற்போதைய ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் இக்னிஸ் போன்ற மாடல்களும் இதே பிளாட்ஃபார்ம்-ஐ தழுவி உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
புதிய காரின் முன்பக்கம் க்ரோம்-ஸ்டெட் செய்யப்பட்ட கிரில், ஸ்டிரெட்ச் அவுட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப், புதிய முன்பக்க பம்ப்பர், முக்கோன வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப் மற்றும் பின்புறம் புதிய வடிவமைப்பு கொண்ட டெயில்கேட் மற்றும் L-வடிவம் கொண்ட டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளது.
உள்புறம் ஃபாக்ஸ் மரத்தாலான இன்செர்ட், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயியன்மென்ட் சிஸ்டம், ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஏசி வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலின் பூட் கொள்ளளவு 18 லிட்டர்கள் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட அதிக இடவசதியை வழங்குகிறது.
மற்ற அம்சங்களை பொருத்த வரை தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், புதிய லெதர்-ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், டில்ட் வசதி, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ISOFIX, எலெக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் எர்டிகா மாடலில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 102 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் 5 அல்லது 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த கார் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின், 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.